திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

ஸ்ரீலங்கா‌ முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் 15 ஊடகவியலாளர்கள்
சன் டிவி மற்றும் சென்னை பிரஸ் கிளப்க்கு சென்று உரையாடினார்கள்.

ஸ்ரீலங்கா‌ முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் முன்னாள் தலைவரும், செயற்பாட்டாளருமான மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன், முஸ்லிம் வீடியோ ஃபோரம் தலைவர் புர்கான் பீ இப்திகார் ஆகியோர் தலைமையில் 15 ஊடகவியலாளர்கள் தமிழகத்திற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்கள்.
கடந்த 12 ஆம் திகதி வருகை தந்தவர்கள் பல்வேறு சுற்றுலா தலமான குற்றாலம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, ஆழ்வார்திருநகரி, காயல்பட்டினம், திருச்சி, புத்தாநத்தம், மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தார்கள்.

பின்னர் இந்தியாவிற்கு வந்த நோக்கம் அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, தமிழக அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், மனித நேய கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் சந்தித்து இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள் முதலீடு செய்து அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

பயணத்தில் இறுதி நாளான சனிக்கிழமை காலையில் சன் டிவி செய்தி பிரிவு பொறுப்பாளர் குணசேகரன் அவர்களை சந்தித்து இலங்கை தொடர்பான பிரச்சினை மற்றும் அங்கு நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் நிலைப்பாடுகள் குறித்து உரையாடினார்கள்‌. ஸ்ரீலங்கா
முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் இலங்கையில் உள்ள ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள்.

பின்னர் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் அலுவலகத்திற்கு சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் முன்னாள் தலைவரும், செயற்பாட்டாளருமான மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன், முஸ்லிம் வீடியோ ஃபோரம் தலைவர் புர்கான் பீ இப்திகார் ஆகியோர் தலைமையில் 15 ஊடகவியலாளர்களை மேலாண்மை இயக்குநர் ஜீவானந்தம், விளம்பரம் மேலாளர் நாகை ஆர்.பாபு, திருச்சி மாவட்ட ஊடகவியலாளர் ஷாகுல் ஹமீது ஆகியோர் வரவேற்றார்கள். பின்னர் செய்தி பிரிவில் சென்ற அவர்கள் அங்கு ஆசிரியர் முத்துகுமார் வரவேற்று செய்தி பிரிவில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆசிரியர் விளக்கி கூறினார். பின்னர் ஆசிரியர் முத்துகுமார் இலங்கையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி மற்றும் தமிழிக அரசியல் கட்சித் தலைவர்கள் செயல்பாடு குறித்து விளக்கமாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீனிடம் கேட்டறிந்தார். மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் அச்சிடும் மிஷின்களை பார்வையிட்டார்கள்.

அதேபோல் சென்னை பிரஸ் கிளப் இணைச் செயலாளர் பாரதிதமிழன், உழைக்கும் பாத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அசத்துல்லா ஆகியோர் சந்தித்து இந்திய மற்றும் இலங்கைக்கு இடையேயான ஊடகவியலாளர் தொடர்பு தொடர்ந்து இருக்க வேண்டும். நீங்கள் அங்கே வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததும். பின்னர் என்.எம். அமீன் சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் அனைவரும் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டிற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்கள்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.