ஹட்டனில் வலம்புரி சங்கு விற்பனை செய்ய முயற்ற இருவர் கைது!
விற்பனைக்கு தயாராக இருந்த 6 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சந்தேக நபர்கள் இருவர் நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்,
ஹட்டன் - கொழும்பு வீதியில் வசிக்கும் சந்தேக நபர், வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற போது மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் விஷேட அதிரடிப் படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும் கைதான இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வலம்புரி சங்கினை 6 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்காக பொருந்திக் கொண்டு சில மணித்தியாலங்களின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நுவரெலியா ' மற்றும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரதான சந்தேக நபரின் வீட்டிலேயே வலம்புரி சங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது எனவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துரையிடுக