இருநாள் விழுமிய கற்கைநெறி பயிற்சி பட்டறை
ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தினால் அமுல்படுத்த பட்டு வரும் SCOR திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் மூன்று கல்வி வலயங்களை (அம்பாறை, சம்மாந்துறை,கல்முனை) அடிப்படையாகக் கொண்ட மூன்று இனத்தையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் 25 ஆசிரியர்களுக்கான விழுமிய கற்கைநெறிக்கான இரண்டு நாள் (08,09/02/2023) பயிற்சி பட்டறை நிந்தவூரின் தோம்புகண்டம் ஹோட்டலில் இடம்பெற்றது.
இப்பயிற்சியினாது, GAFSO இன் திட்டபணிப்பாளர் திரு. A.J காமில் இம்டாட் அவர்களின் தலைமையில் நடைபெற்றதை அடுத்து இதன்
வளவாளர்களாக GAFSO இனால் தெரிவுசெய்யப்பட்ட 3 கல்வி வலயங்களின் ISA கலந்துகொண்டனர்.
மேலும் இதன் ஒருங்கிணைப்பாளரான ஆசிய மன்றத்தின் உத்தியோகத்தர் திரு. HM ஜவாகிர் மற்றும் GAFSO இன் கள உத்தியோகத்தரும் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக