'உடைந்த சூரியன்' புகைப்படத்தினை அனுப்பியது விண்வெளி ஓடம்!
புகைப்படத்தால் திகைத்த ஆய்வாளர்கள்; பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா...?
சூரியனின் ஒரு பகுதி திடீரென தனியாக உடைந்து அதன் மேற்புறத்தில் சுற்றி வருகிறது. இது எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
சக்தி வாய்ந்த சூரியன் குறித்துக் மேலதிகமாக பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பல கோடி மைல் தொலைவில் இருக்கும் இந்த சூரியனை அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இப்போது சூரியினில் நிகழ்ந்துள்ள அற்புதமான மாற்றத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சூரியனின் ஒரு பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்து அதன் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்று சுழற்சியை உருவாக்கியுள்ளது.
இது எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல் தொடர்புகளைக் கூட பாதிக்கும். எனவே, சூரியனில் என்ன நடந்தாலும் அது ஆய்வாளர்களுக்குக் கவலையையே ஏற்படுத்தும். இதன் காரணமாகவே ஆய்வாளர்கள் இது தொடர்பாகத் தீவிரமான ஆய்வில் இறங்கியுள்ளனர்.
"சூரியனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி உடையும்போது இவ்வளவு பெரிய சூழல் ஏற்படுவதை நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை. இந்த விவகாரத்தில் ஆய்வாளர்கள் மத்தியிலேயே குழப்பம் தொடர்ந்து வருகிறது. இருப்பினும், சூரியனின் காந்தப்புலத்தின் தலைகீழ் மாற்றத்துடன் இது தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் சந்தாகின்றனர்.
கருத்துரையிடுக