TNA - JVP சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள்

Rihmy Hakeem
By -
0
(அஷ்ரப் ஏ சமத்)

தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவா் ஆர் சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி தலைவா் அநுரக்குமார திசாநாயக்கா ஆகியோா்க்களுக்கிடையிலான கூட்டம் இன்று(11) பத்தரமுல்லையில் உள்ள  ஜே.வி.பி அலுவலகத்தில் நடைபெற்றது. அதிகாரமளிக்கப்பட்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் 20வது அரசியல் அமைப்புக்கு ரீ.என்.ஏ வின் ஆதரவைப் பெறுதல் சம்பந்தமாக  இங்கு இரு கட்சிக் பிரநிதிகளுக்கிடையே பேச்சுவாா்த்தை நடாத்தப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த அநுகுமார திசாநாயக்க ஜனாதிபதி முறைமை ஒழித்து 225 பாராளுமன்றத்திற்கு அதிகார வழங்குதல் போன்றவற்றைக்கு நாங்கள் தமிழ்த் தேசிய கூட்டமுன்னணியிடம் ஆதரவு கேட்டு பேசினோம். இருந்தும் இந்த நாட்டில் உள்ள 1 கோடி 50 இலட்சம் மக்களிடம் ஜனாதிபதி முறைமை ஒழிப்பதற்கு நாங்கள் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு நாங்கள் செல்வோம் என தெரிவித்தாா்  ரீ.என்.ஏ தொடா்ந்தும் நாங்கள்  புதிய அரசியல் முறைமைகள் பற்றியும் நாங்கள் தொடா்ந்தும் பேசுவதாகவும் அநுரகுமார திசாநாயக்க அங்கு தெரிவித்தா்ா.

இங்கு கருத்து தெரிவித்த ஆர் சம்பந்தன்
ஜனாதிபதி முறைமை மற்றும்  20ஆவது அரசியலமைப்பு பற்றி நாங்கள் பேசினோம். அதற்கு முன்  அரசியல் திருத்தம் சம்பந்தமாக அண்மையில் ஜனாதிபதி பிரதமரிடம் பேசினோம் .அவ்விடயங்களுக்கு  ஜே.வி. பி ஆதரவு தெரிவிப்பது பற்றி மீண்டும் நாங்கள் பேசுவோம் எனவும்  ஆர். சம்பந்தன் அங்கு தெ்ரிவித்தா்ா்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)