கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு அருகில் முதலாவது சூரிய மின்ஒளி
( மினுவாங்கொடை நிருபர் )
நாட்டில் முதன் முறையாக சூரிய சக்தியைப் பயன்படுத்தி, வீதிக் கடவை உள்ள இடங்களில் மின் ஒளிக்காக மின் குமிழ்கள் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளன.
இதற்கு, கொழும்பு மாநகர சபை அனுசரணை வழங்கியுள்ளது.
முதலாவது மின் குமிழ், கொழும்பு சி.டப்ளியூ. டப்ளியூ. கன்னங்கர மாவத்தையில் கொழும்பு - தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகாமையில் பொறுத்தப்பட்டுள்ளது.
எவராவது ஒருவர் மஞ்சல் கடவை மூலம் வீதியைக் கடக்கும் பொழுது, மஞ்சல் கடவையில் பொருத்தப்பட்டுள்ள மின் ஒளி உடனடியாக அலங்காரத்துக்கு உள்ளாகும்.
இதற்கும் மேலதிகமாக வாகனச் சாரதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை சமிஞ்சையும் விடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், கொழும்பு நகரத்தில் 23 இடங்களில் 46 சூரிய மின் குமிழ்கள் பொறுத்தப்படவுள்ளன. இதற்காக ஒரு கோடி 40 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாக, கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )