கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட 454 பேர் உள்ள ஜப்பான் பயணிகள் கப்பலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் கூடுதல் கவனம்

Rihmy Hakeem
By -
0
ஜப்பான் டயமன்ட் பிறின்ஸ் பயணிகள் கப்பலில் உள்ள இலங்கையர் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்கள் தொடர்பில் டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் கப்பல் நிறுவனத்துடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக வெளியுறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸின் காரணமாக இந்த கப்பல் துறைமுகத்துக்கு வருவதை பல நாடுகள் தடுத்துள்ளன. இந்த கப்பலில் வைரஸினால் பாதிக்கப்பட்ட 454 பேர் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
3700 பயணிகளுடனான இந்த கப்பலை கடந்த 14 நாட்களாக யப்பான் அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர். பயணிகளுக்கு தேவையான சிகிச்சை நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)