இன்றைய தினம் (18) ஊராபொல பிரதேசத்தில் உள்ள விவசாய சேவை நிலையத்தில் இருந்து கஹட்டோவிட்ட பிரதேசத்திற்கு அதிகாரிகள் விஜயம் செய்துள்ளதுடன், கஹட்டோவிட்ட பிரதேசத்திற்கான விவசாய சங்கமும் (ගොවිජන සමිති) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
விவசாய சேவை நிலைய அதிகாரிகள், கிராம சேவகர்கள் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்ட கூட்டம் இன்றைய தினம் கஹட்டோவிட்ட வாராந்த சந்தை நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள சகோதரர் இஸ்மாயில் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு போன்ற விடயங்கள் அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. விவசாய சங்கத்திற்கான அங்கத்தவர்களின் தெரிவும் இடம்பெற்றதுடன், தலைவராக சகோதரர் இஸ்மாயில் அவர்களும் செயலாளராக அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









