இலங்கையின் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் நாகூர் மீரான் ஸாஹிப் (றஹிமஹூல்லாஹ்) அவர்களின் பங்களிப்புக்கள் இந்திய மற்றும் இலங்கை

Rihmy Hakeem
By -
0
இலங்கையின் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் நாகூர் மீரான் ஸாஹிப் (றஹிமஹூல்லாஹ்)  அவர்களின் பங்களிப்புக்கள்   இந்தியா மற்றும் இலங்கை 
(Nagore meeran Sahib (RA) & his contributions to Anti colonial struggle in India & Ceylon) 


இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வேளையில் அவர்கள் தேசிய சுதந்திரத்திற்கு வழங்கிய பங்களிப்புக்கள் பற்றி ஆராய்வது அவசியமாகும்.

நாகூர் மீரான் ஸாஹிப் என்று அழைக்கப்படும் செய்ஹ் ஷாஹூல் ஹமீத் காதிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் நன்கறியப்பட்ட அறிஞராவார்.

.

சமூக, சமய மறுமலர்ச்சியில் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்கள் நீண்டவை.  ஷாஹூல் ஹமீத் (றஹ்) அவர்களையே  தெற்கின் ஹாஜா என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

 இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் பிறந்தார்கள். பின்னர் அவர்கள் கி.பி 1533ம் ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டமான நாகைப்பட்டணத்தின், நாகூர் என்கிற கிராமத்திற்குள் காலடி எடுத்துவைத்தார்கள் .செய்ஹ் ஷாஹூல் ஹமீத் காதிரி அவர்கள் நாகைப்பட்டணத்திற்கு வருகை வந்த, காலத்தில் தமிழ் முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார ரீதியில் பாரிய பிரச்சினைகளுக்கும், நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருந்தார்கள்.

வர்த்தக சமூகமாக இருந்த தமிழ் முஸ்லிம்களும், மாப்பிள்ளை முஸ்லிம்களும் ( கேரள முஸ்லிம்களும்) எதிர்பாராதவிதமாக போர்த்துக்கேயரால் சூறையாடப்பட்டால்கள். இந்து சமுத்திரத்தின் 75% வர்த்தக ஆதிகத்தை வைத்திருந்த  தமிழ் முஸ்லிம்களும், மாப்பிள்ளை முஸ்லிம்களும் தமது கடல் வர்த்தக ஆதிக்கத்தை இழந்தார்கள். அவர்களுக்குச் சொந்தமான பெரும்பாலான கப்பல்களை போர்த்துக்கேயர் பலவந்தமாகக் கைப்பற்றினார்கள்.

 கரையோர நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, நூற்றாண்டு காலமாக இருந்துவந்த சொத்துக்களும் போர்த்துக்கேயர் வசமானது. 

 இதே காலப்பகுதியில் கேரளாவின் துறைமுக நகரான கோழிக்கோட் பகுதி சாமூத்திரியர்கள் அல்லது சமோரின் மன்னரின் ஆட்சியில் இருந்தது. சாமோரின் ஆட்சியார்களின் கடற்படைத் தளபதிகளாக  ''குஞ்சாலி மாரிக்கார்''கள் பணியாற்றினார்.  குஞ்சாலி மரிக்கார்கள் சிறந்த மாலுமிகளாகவும், கடற்படைத்தளபதிகளவும் இருந்தார்கள்.

இந்து சமுத்திரத்தின் நிர்வாகம் குஞ்சாலி மரிக்கார்களின் கீழ் இருந்தது. இந்து சமுத்திரத்தில் கடற்படை பாதுகாப்பு முறைமையை (Naval Defence system)முதலில் அறிமுகம் செய்த பெருமை குஞ்ஞாலி மரிக்கார்களையே சாரும். போர்த்துக்கேயருக்கு எதிராக கடற்போரில் ஈடுபட்டவர்களும் இவர்களேயாவர். 

குஞ்சாலி மரிக்காரில் நான்கு பேர் முக்கியமானவர்கள். இவர்கள் நான்கு பேரும் காதிரி சூபி ஆன்மீக அமைப்பைச் சேர்ந்தர்கள். இதில் மூன்றாவது குஞ்சாலிமரிக்கார் என்று அழைக்கப்பட்ட  பாட்டு குஞ்சாலி போரத்துக்கேயரை பல தடவைகள் விரட்டியடித்தவரவார். இந்தக் காலப்பகுதியில் நாகூர் மீரான் ஸாஹிப் என்று அழைக்கப்படும் செய்ஹ் ஷாஹூல் ஹமீத் (றஹ்) அவர்களுடன்; மூன்றாவது குஞ்சாலிமரிக்கார் - பாட்டு குஞ்சாலி நெருங்கிய உறவை பேணிவந்தார்கள்

செய்ஹ் ஷாஹூல் ஹமீத் அவர்களின் உத்தரவின் பேரிலேயே "குஞ்சாலி மரிக்கார்க –பாட்டுக் குஞ்சாலி" போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தங்களை மேற்கொண்டார் என்று வரலாற்று ஆசிரியர் Ronald E. Miller  அவர்கள்  Mappila Muslims of Kerala என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள்.

 குஞ்சாலிமரிக்காரின் படையில் நாகூர் மீரான் ஸாஹிப் (றஹ்) அவர்களின் 404 மாணவர்கள் (முரீதுகள்) இருந்தார்கள். இந்தக் குழுவுக்கு நாகூர் மீரான் ஸாஹிப் (றஹ்)அவர்களின் கலீபாவான காயல்பட்டணத்தைச் சேர்ந்த "செய்ஹ் ஸதக் மரிக்கார்" அவர்கள் தலைமை தாங்கி போர்த்துக்கேயருக்கு எதிரான பல கப்பல்களை தீயிட்டு கொழுத்தியதோடு, ஏனைய கப்பல்களை கைப்பற்றினார்கள்.

இலங்கையின் அப்போதைய சித்தாவக்க ராஜ்யத்தின் மன்னராக இருந்த மாயாதுன்னையின் அழைப்பை ஏற்று  நாகூர் மீரான் ஸாஹிப் (றஹ்) அவர்களின் 3 மாணவர்களான (3கடற்படைத் தளபதிகளான)
1.குஞ்சாலிமரிக்கார்,
2.பச்சிமரிக்கார்,
3.அலி இப்றாஹீம் ஆகியோர் இலங்கையின் "சிலாபம்" என்ற நகருக்கு வந்து இலங்கை மக்களோடு இணைந்து போர்த்துக்கேயரைத் தோற்கடித்தார்கள் என்று இலங்கையின் வரலாற்று ஆசிரியர் டிக்கிரி அபேசிங்ஹ அவர்கள்  Portuguese rule in Ceylon  என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள்.

 நாகூர் மீரான் ஸாஹிப் (றஹ்)  அவர்களுடன் தமிழ்நாட்டின் நாகூரில் குஞ்சாலிமரிக்கார் வாழ்ந்து வந்தார். இவரை கௌரவிக்கும் வகையில் நாகூரில்; ஒரு தெருவுக்கு 'குஞ்ஞாலிமரிக்கார் தெரு' என்று பெயரிடப்பட்டுள்ளதோடு அது இன்று வரை  'குஞ்ஞாலிமரிக்கார் தெரு' என்று அழைக்கப்படுகிறது.

பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)