தனது தோட்டத்திற்குள் நுழைந்த மாட்டுக்கன்றை, தோட்ட உரிமையாளர் அடித்துத் துன்புறுத்தி பெற்றோல் ஊற்றிக்கொளுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் மின்னேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கன்றின் அலறல் சத்தம் கேட்ட கன்றின் உரிமையாளர் தோட்டப்பக்கம் சென்று பார்த்த போது தனது கன்று பாதியளவில் எரிந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மின்னேரியா, ரொட்டவெவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த 38 வயதுடைய தோட்ட உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

