கல் எளிய அலிகார் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர், பஸ்யாலை எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா (அதிபர் சேவை - தரம் 2) எழுதிய "புதையல் தேடி" கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் அவரது பாடசாலையில் இடம்பெற்றது.
தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளரும், கல் எளிய அலிகார் மகா வித்தியாலய முன்னாள் அதிபரும், நூலாசிரியரின் கணவருமான எம்.ஏ.எம்.ரிப்தி தலைமையில் அலிகார் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற்பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொண்டார்.
பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற அதிபரும், சமாதான நீதவானும், நூலாசிரியரின் தந்தையுமான ஏ.சி.செய்யது அஹமத் கலந்து சிறப்பித்தார்.
விஷேட அதிதிகளாக கிண்ணியா முன்னோடிகள் கலை, இலக்கிய வட்டத்தின் தலைவர் பி.ரீ.அஸீஸ், நவமணி செய்தி ஆசிரியரும் சியனே ஊடக வட்டத்தின் உப தலைவருமான சாஜஹான், ஆசிரிய ஆலோசகர் திருமதி மௌபியா உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.எம்.ஸாபிர், கம்பஹா/களனி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் (தமிழ் மொழி) அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.தௌஸீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பட உதவி - அஷ்ரப் ஏ சமத்