கசிப்புக் காரர்களையும் கப்பம் வாங்குபவர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடாது என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்றில் மிளகாய்த் தூள் தாக்குதலை மேற்கொண்டமை குறித்து வினவிய போது, அன்று பொது எதிரணியில் உள்ள பலர் மிளகாய்த்தூள் தாக்குதலை மேற்கொண்டார்கள். என்னை மட்டுமே அனைவரும் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்று அவர் பதிலளித்தார்.

