2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு கிடைக்கப் பெற்ற முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.
இதற்கமைவாக ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில், ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் ஊடாக சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
முன்னாள் கடற்படை அதிகாரி உள்ளிட்ட பலர் தமது முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

