இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவினை கைது செய்யுமாறு உத்தரவு!

Rihmy Hakeem
By -
0
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவினை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன அவர்கள் இன்று (17) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

2016 பெப்ரவரியில் ஐ.நா. இன் மனித உரிமைகள் ஆணையாளர் ஸெய்யித் அல் ஹுசைனின் வருகையை எதிர்த்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கில் ஆஜராகாத காரணத்தினாலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)