( மினுவாங்கொடை நிருபர் )
இணையத்தள நிதி மோசடிகளினால் பொதுமக்கள் ஏமாந்து விடாமல், மிக அவதானமாகவும் விழிப்புடனும் இருந்து கொள்ளுமாறு, இலங்கை தகவல் தொழில்நுட்பச் சங்கம் பொதுமக்களிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பல நிதி மோசடிச் சம்பவங்கள் பாதிவாகியுள்ளதாக, இலங்கையின் தகவல் தொழில்நுட்பச் சங்கத்தின் தலைவர் ராஜீவ் யாசிரு குருவிடேஜ் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தளம் மூலமான வர்த்தகச் செயற்பாடுகள் தொடர்பிலான போர்வையில் இத்தகைய மோசடிக்காரர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னர் தமது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு மோசடிக்காரர்கள் வலியுறுத்தி, இது போன்ற நிதி மோசடிச் செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாகவும் குருவிடேஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இவ்வாறான இணையத்தள நிதி மோசடிகளினால் பொதுமக்கள் ஏமாந்து விடக்கூடாது என்று, இலங்கையின் தகவல் தொழில்நுட்பச் சங்கம் வலியுறுததிக் கேட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )

