சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!

Rihmy Hakeem
By -
0



கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்குமாறு வைத்திய அதிகாரிகள் மற்றும் கல்வியலாளர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இறப்பிற்கும் புகைத்தலுக்கும் இடையில் உள்ள தொடர்பினை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து முன்னதாக பல்வேறு வைத்திய நிறுவனங்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த நிலையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஜரட்ட பலகலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுத் துறையினரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)