கணவனை பெற்றோல் ஊற்றி கொழுத்திய மனைவி (இலங்கை)

Rihmy Hakeem
By -
0


 -செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் கணவனின் தொல்லை தாங்கமுடியாத மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய கணவன் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு  இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு, கணவன் வெளியிடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று, தனது பிள்ளைகளை பார்க்க வீட்டுக்கு சென்ற கணவனால் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)