அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு ஒன்லைனில் நடாத்துவதற்கு ஏற்பாடு (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 

கொவிட் - 19 வைரஸ் நிலைமையின் காரணமாக பொது மக்களுக்கு நீதி அமைச்சுக்கு விஜயம் செய்வதில் உள்ள சிரமம் தொடர்பாக கவனத்தில் கொண்டு நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரியின் தலைமையில் திங்கட் கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் தினம் Online னில் நடாத்துவதற்கு ஒழுங்குள் செய்யப்பட்டுள்ளன.

(LINK) https://bit.ly/3lIBFgq என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பிரச்சினைகளை முன்வைக்க முடியும், அத்தோடு நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moj.gov.lk இல் பிரவேசித்து சம்பந்தப்பட்ட LINK ற்குள் பிரவேசிக்க முடியும் என்று நீதி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அன்று நடைபெறும் பொதுமக்கள் தினத்துக்கமைவாக அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரிச்சினைகளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு முன்வைக்க முடியும் என்றும் அமைச்சின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)