கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீதிகளில் உயிரிழப்பதாக தகவல் வெளியிட்ட மற்றுமொருவர் கைது!

Rihmy Hakeem
By -
0

 


கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீதிகளில் உயிரிழப்பதாக போலியான தகவல்களை வெளியிட்ட மற்றுமொரு நபர் கண்டி, ஹன்தான பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரால் வீதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதாக, சுகாதார சேவை தொடர்பில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று (16) முன்னிலைப்படுத்தப்படவுள்ளாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொரோனா மரணம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் இதற்கு முன்னர் கடுகன்னாவை பகுதியில் வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்டதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)