கைதிகளின் மரணத்திற்கு துப்பாக்கி சூடே காரணம் - நீதிமன்றில் நிபுணர் குழு

Rihmy Hakeem
By -
0


 மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்த கைதிகளுள் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனரென, நிபுணர்கள் குழு நடத்திய பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வத்தளை நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது உயிரிழந்த கைதிகளின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா? என்பது தொடர்பில் வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)