புத்தர் சிலையின் கண்ணாடி சேதம் : ஹிங்குல, மாவனெல்ல நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0

 


மாவனெல்லை, ஹிங்குல பிரதேசத்திலுள்ள தெடிமுன்ட தேவாலயத்திற்கு முன்பாக உள்ள புத்தர் சிலைக்கு கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் கண்ணாடி உடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது மாவனெல்லை நகரத்திற்கு பொலிஸ் விசேட அதிரப்படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் அங்கு இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸ் உட்பட பல்வேறு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த தேவாலயத்திற்கு முன்பாகவுள்ள புத்தர் சிலையின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே ஹிங்குல மற்றும் மாவனெல்லை நகரங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் சிலைக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையெனவும், உடைந்த கண்ணாடியை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 



Source 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)