எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. எதிர்காலத்தின் மீதே நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை தான் வாழ்க்கை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று (18) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கொவிட் இனை கட்டுப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறதா என்று எமது சியன நியூஸ் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"நாம் எதிர்க்கட்சி என்பதனால் பொறுத்திருந்து பார்ப்போம். அதனாலேதான் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் வர்த்தக நிலையங்களை தாமாக மூடி கொவிட் ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பாராட்ட வேண்டும். ஏனென்றால் அதன் காரணமாக அவர்களது வருமானம் குறைவடைகின்றது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டாலும் செய்கிறார்கள்.
அதனையும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் பாராட்டாமல் எதிர்க்கட்சி தான் காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறார்.
அவ்வாறு சுயமாக தமது வர்த்தக நிலையங்களையும் சில நாட்களுக்கு மூடுமாறு கொழும்பு மாநகர வர்த்தகர்களையும் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எமது கேள்விகளும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் பதில்களும் கீழுள்ள வீடியோவில் 01:16:15 - 01:18:44 இல் பார்க்கலாம்
විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්ය හමුව සජීවීවවිපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්ය හමුව සජීවීව
Posted by SJB - Api on Tuesday, August 17, 2021