கேகாலையில் கோர விபத்து : மூவர் பலி! இருவர் படுகாயம்!

Rihmy Hakeem
By -
0

 

கேகாலையில் நேற்று (09) இடம்பெற்ற கோர விபத்தில் 27 வயதான மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் மிப்லார் மிஹ்லார், ரஹ்மி ரஹ்மான் மற்றும் மனாஸிர் கான் மல்காண் ஆகியோரே உயரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்களான அல்தாப் சாதுலி மற்றும் ஸப்ரான் ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடைய மோட்டார் சைக்கிள்களுடன் எதிரே வந்த வேன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - Siyane News

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)