(ஸனா அன்ஜும்)
அல்-ஹாஜ் மௌலவி எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) அவர்களால் எழுதப்பட்ட “ஹுப்புர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” (Hubbur Rasool Sallallahu Alaihi Wasallam) எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2026 ஒக்டோபர் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பு 12, டேம் வீதியில் அமைந்துள்ள கச்சேரி கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த நூல், அல்-ஹாஜ் மௌலவி எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) அவர்களால், நிகழ்த்தப்பட்ட வானொலிப் பேச்சுக்களின் தொகுப்பாகும்.
இவர் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம கதீப் மற்றும் கஹட்டோவிட்ட தரீக்கத்துல் பாதீபிய்யத்துல் காதிரிய்யாவின் கலீபாவும் ஆவார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கம்: 077 898 4218

