கிறிஸ்ட்சேர்ச் - மாரச் 2019
--------------------------------------------

ஈஸாவின் மீது
சாந்தி உண்டாகட்டும்

அவர் விதைத்ததெல்லாம்
அன்பு மட்டுமே
அன்பை மட்டுமே அவர் விதைத்தார்

அவரை மறுதலித்தவர்களும்
அவரைப் புறக்கணித்தவர்களும்
அவரைப் பிழையாகப் புரிந்து கொண்டவரகளும்
ஆயுதங்களிடம்
தம் ஆத்மாவை அடைமானம் வைத்தனர்

ஆயதங்களைச் செய்தனர்
ஆயுதங்களை விற்றனர்
ஆயுதங்கள் கொண்டே
அனைத்தையும் செயதனர்

அடுத்தவன் பொருளை
அடுத்தவன் நிலத்தை
அடுத்தவன் உயிரை
அடுத்தவன் கெளரவத்தைக்கூட
அபகரித்தெடுத்தனர்

அநியாயங்களை நியாயமாக்கியபடி
அநியாயத்துக்குட்பட்டவர்களைப்
பயங்கரவாதிகள் என்று
பறை சாற்றினர்

இன்று
ஈஸாவின் பெயராலான பிரதேசத்தில்
ஈஸாவை மற்றொரு முறை
படுகொலை புரிந்தனர்
பின்னர்
பள்ளிவாசலுக்குள் புகுந்து
நாற்பத்தொன்பது பயங்கரவாதிகளைச்
சுட்டுக் கொன்றனர்

ஆம் –
உலகம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்க
குழந்தை, பெண்கள் உட்பட
நாற்பத்தொன்பது பயங்கரவாதிகளைச்
சுட்டுக் கொன்றனர்!

(அஷ்ரப் சிஹாப்தீன்)

15.03.2019

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.