அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மேலதிக அமைச்சு பதவி


அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வகித்த கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுக்கு மேலதிகமாக தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மார்ச் 18ஆம் திகதியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வகித்த குறித்த துறைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here