பாடசாலைக் கல்விப் புலத்தில் காலத்திற்குக் காலம் பல அபிவிருத்திகளைத் திட்டமிடல் மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவது மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கவும் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேன்படுத்துவதற்காகும்.

கற்பித்தலின் போது மாணவர்களின் கவனக்கலைப்பு இலக்கை அடைவதில் பாதிப்பை ஏற்படுத்தும். சூழல், இடம்,காலநிலை சுவாத்தியங்கள் என இன்னும் பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கற்பிப்பவர்களின் ஆடைக் கலாசாரம், வெளித் தோற்றம் மாணவர்களின் கற்றலில் கவனக்கலைப்பை ஏற்படுத்தக் காரணமாகவுள்ளது எனலாம். அது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது.

பதின்மவயது (Teenagers) மாணவர்களுக்குரிய உளவியல் அணுகுனுறையிலே இந்த விடயத்தை நோக்குவதே பிரச்சினையின் தன்மையை இலகுவாக, ஆழமாக விளங்கிக் கொள்ளலாம்.

கவர்ச்சியை நோக்கி ஈர்ப்புப்பார்வை, ஆகர்சிக்கப்படல், சிந்தனை, பேச்சு, அங்கங்களை வர்ணனை செய்ய தூண்டக் கூடிய இயல்பு அந்த பதின்ம வயதுக்கே உரியது இயல்பு தன்மை.அத்தோடு நவீன வடிவிலான ஆடை வடிவமைப்புகள், நிறங்கள் , ஆபரணங்கள் அவற்றின் மீதான ஈர்ப்பு மாணவிகளுக்குரிய இயல்புகளாகும்.

ஒரு டயரை சந்தைப்படுத்த விளம்பரத்தில் பெண்ணை அரை நிர்வாணத்துடன் காட்சிப்படுத்தும் நிர்வாண உலகம் இது.எங்கும் எதிலும் விரசம், காமம் கலந்ததுள்ளது. இது இளைய தலைமுறையின் உள்ளங்களில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்ற
வதைப் போல் தீய விடயங்களையும், பேச்சுக்களையும் தமக்கும் வழிகாட்டுபவர்களை நோக்கிப் பேசுவதனை கேட்க முடிகிறது.

இறுக்கமான ஆடைகள், உடல் பரிமாணங்கள், அச்சொட்டாக தென்படும் அளவுக்குள்ள ஆடைகள்,  உள்ளாடைகளின் பகுதிகள் வெளிப்படும் அடிப்படையிலான ஆடைகள், மறைக்கப்பட வேண்டிய உடலுறுப்புக்கள் காட்சிப் படுத்தக் கூடிய ஆடைகள், கடுமையான பல வர்ணங்களைக் கொண்ட ஆடைகள் அணிந்து பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவது ஒழுக்கம் சார் அடிப்படைக்கு முரணானது.

ஆசிரியர் ஒழுக்கக் கோவை 2012/37 சுற்றறிக்கையின் 5.1(ஆ) விதியில் கற்பிப்பவர்களின் ஆடை தோற்றம் தொடர்பா பேசுகிறது;
" சகல சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கம் மற்றும் விழுமியத்தைப் பாதுகாக்கக் கூடியவாறு சுத்தமாக எளிமையான முறையில் ஆடைகளை அணிந்திருத்தல் வேண்டும்." இந்த நிபந்தனை இரு பாலாருக்குமானது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.

தோண்டைக் எனும் கல்வி உளவியலாளரின் "தூண்டலுக்கான துலங்கள் விதியினடிப்படையில்" மோசமான சிந்தனையின் பால் இட்டுச் செல்லக் கூடிய தூண்டல் காரணங்களுக்கான நுழைவாயில்களை அடைக்க வேண்டியுள்ளன. துலங்கள் செயலிழக்கும்.

மாற்று வழியை கையால்வது காலத்தின் தேவை. என்ற அடிப்படையில் மாற்று யோசனையாக,
ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலை வளாகத்தில் நுழையும் போது கழுத்து முதல் கரண்டைக்கால் வரைக்கும் சட்டத்தரணிகள் அணிவதைப் போன்ற மேலங்கியை அணியும் வழிமுறையை அறிமுகம் செய்வதானது உடல் பாகங்களை, கவர்ச்சியான வெளித் தோற்றத்தை மறைத்தலினூடாக கற்றலில் ஈடுபடுபவர்களின் கவனக்கலைப்பை குறைக்க ஓரளவு காரணமாக அமையும்.

இந்த ஆசிரியர் ஒழுக்கக் கோவையின் நிபந்தனையைப் பேண கல்விப் புலத்திலுள்ள நலன் காக்க விரும்புபவர்கள் இது தொடர்பாக கரிசணை செலுத்த வேண்டும்.

கல்வியினூடாக மண்ணிலுள்ள மனித உள்ளங்களில் விழுமியங்கள் விண்ணைத் தொட வேண்டுமேயல்லாமல் மண்ணுக்குள் புதையுண்டு விடக் கூடாது.


A Raheem Akbar
மடவளை பஸார்ல்
2019/03/12

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.