12 ஆவது ஒருங்கிணைந்த சர்வதேச பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கண்காட்சி சென்ற 5 ஆம் திகதி முதல் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்கள் மற்றும் விடயம் சம்பந்தமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் கலந்து சிறப்பித்தார். பிராந்திய மற்றும் பூகோள ரீதியில் ஏற்படும் அனர்த்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி ஆராய்வதே இதன் நோக்கமாகும்.நெருப்பு அணைத்தல் மற்றும் உயிரை காப்பாற்றுதலுக்கு நவீன தொழில்நுட்பத்தை பாவித்தல் பற்றி பல்வேறு நாடுகளுக்கும் இதன் போது தெளிவூட்டப்பட்டது.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.