பாஸ்போர்ட் கட்டணங்கள் அதிகரிப்பு

Rihmy Hakeem
By -
0


( மினுவாங்கொடை நிருபர் )

   கடவுச்சீட்டைப்  பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

   இதன்பிரகாரம், சாதாரண சேவை ஊடாக  கடவுச்சீட்டைப்  பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா,  முதலாம் திகதி முதல் மூவாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

   இதேவேளை,  ஒருநாள் சேவைக் கட்டணமாக இருந்த பத்தாயிரம் ரூபா, 
பதினைந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. 

   இதுதவிர, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான விசேட  கடவுச்சீட்டுக்கு சாதாரண சேவையின் போது 2 ஆயிரம்  ரூபாவில் இருந்து 2,500 ரூபாவாகவும், ஒருநாள் சேவையின் போது 5 ஆயிரம்  ரூபாவில் இருந்து 7,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

   2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம், இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாகவும், திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)