( மினுவாங்கொடை நிருபர் )

   கம்பஹா மாவட்டத்திற்கான பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட 17 கட்சிகள் நேற்று (19) வேட்பு மனுக்களைத்  தாக்கல் செய்தன. இவற்றுள் 15 கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, 2 கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

   லிபரல் கட்சி மற்றும் ஒக்கொம ரஜவரு ஒக்கொம வெசியோ ஆகிய இரு கட்சிகளினதுமே  வேட்பு மனுக்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டன. 21 சுயாதீனக் குழுக்கள் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தபோதிலும், அவற்றுல் 15 சுயாதீனக் குழுக்களின் வேட்பு மனுக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

   எதிர்வரும் 2020 பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து 15 அரசியல் கட்சிகளும், 18 சுயாதீனக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவை, தமது  வேட்பு மனுக்களை, உரிய நேரத்தில்  தாக்கல் செய்ததாக, கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சுனில் ஜயலத் தெரிவித்தார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.