கண்டி மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்று ஆளான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அக்குறணை, தெலும்புகஹவத்த பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ஆவார்.

தற்போது இவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, கண்டி போதனா வைத்தியசாலை இயக்குனர், வைத்தியர். ரத்னாயக்க அவர்கள் குறிப்பிட்டதாக, வைத்தியசாலை நலன்புரி சங்க அங்கத்தவர் எஸ்.எம். ரிஸ்வி தெரிவித்தார்.

மேலும், அக்குரணை, தெலும்புகஹவத்தை பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறும், குறித்த நபருடன் தொடர்பு பட்டு இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகுமாறும்,  நோய்க்கான அறிகுறிகள் தென்படும் இடத்து உடனடியாக வைத்தியசாலையை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.