தற்போது நடைமுறையில் உள்ள பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி e-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
www.e-thaksalawa.moe.gov.lk/ (IP 43.224.124.108) ஊடாக e தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிப்பதற்கு மார்ச் 23 முதல் வாய்ப்புகள் கிட்டும். ந தக்சலாவில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை சிறார்களுக்கு பாட செயற்பாடுகள், வினாத்தாள்கள் மற்றும் பாடநூல் தொடர்பான பயிற்சிகள் உட்பட கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதிகமான பாடதிட்டங்களுடன் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

 சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலமாக முதலாம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரைக்கும் 6 வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரைக்குமான பாடப்பரப்புகளும் செயற்பாட்டு பயிற்சிகளும் வினாத்தாள்களும் உட்சேர்க்கப்பட்டுள்ளன.ஆங்கில மொழிக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.