றிசாத் ஏ காதர் 



கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், சுதேச மருத்துவத்துறை ஆணையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுனனின் நெறிப்படுதலில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு அக்கரைப்பற்று யூனானி  மருந்து உற்பத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட SAFOOF JOSAND - Anti Vairal Chooranam  இன்று (2020.03.27) கல்முனை பிராந்திய சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுனனிடம்  கையளிக்கப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து COVID-19ஐ கட்டுப்படுத்தும் பொருட்டு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கும் பொருட்டே  கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளரும், வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம். ஏ.நபீல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வழங்கிவைத்தார்

குறித்த மருந்தானது சாதாரணமாக உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது என்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகளவாக காணப்படுகின்ற உடல்களில் வைரசின் தாக்கம் மிகக்குறைவாக காணப்படும். எனவே குறித்த மருந்தானது இப்போதுள்ள சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும் என தாம் நம்புவதாக ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் இதன்போது தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.