கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று (01) காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணி வரையில் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.