(ஸபர் அஹ்மத்)

கொரானா இங்கிருந்து கதறி அடித்துக் கொண்டு வெளியேறி இருக்க வேண்டும் என்று நினைத்து ஊரடங்கைத் தளர்த்தினார்கள்..பஸ்வண்டிகளில் எல்லாம் சனம் நெருக்கியடிக்கும் ஃபோட்டோக்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. முஸ்லிம் அடையாளங்களுடன் " இஷ்ஷ்ரஹாட பஹினவா 'கேஸ்கள் யாரும் பிரயாணம் செய்யாமல் இருக்க ஆண்டவன் தான் கிருபை செய்ய வேண்டும்.கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடமொன்றில் இருபத்து நான்கு பேர் இந்தப் பதிவு எழுதும் இந்நேரத்தில் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். சனசந்தடியான முஸ்லிம் ஏரியா ஒன்றில் பெரும்பான்மை சமூக நபர் ஒருவரின் பொடுபோக்குத்தனத்தால் கொரானா பரவினாலும் காட்சிகளை காட்டும் போது சும்மா உப்பு உறைப்பு போட்டு மெனக்கிட்டு சமைக்கும் விருந்து கணக்காய் காட்டுவார்கள்.ஃபேஸ்புக்கில் கிலோமீட்டர் நீளத்திற்கு வரப் போகும் கமெண்ட்களில் வழமையான விஷம் இருக்கப் போகிறது.

இருபத்திரண்டாம் தேதி முதல் கொழும்பில் தளர்த்தப்பட இருந்த ஊரடங்கு சட்டம் இருபத்தேழு வரை திடீர் நீடிப்புக்குள்ளாகி இருப்பதில் இருந்து Decision making தரப்புக்கள் திணறிக் கொண்டிருப்பது தெளிவாகிறது..நோய்க்கு இன மத சாயம் பூசப்படும்  தேசத்தில் சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிட்டிஸன்கள் என்ற வகையில் கொஞ்சம் கொமன்சென்ஸ் உடன் வாழ்தல் அவசியம்.நாம் கண்டபடி ஃபுல்டோஸ் போடுவதால் தான் அவர்கள் எப்போதும் சிக்ஸர் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்..

ஏற்கனவே கொரானாவைப் பிடித்து திமிறத் திமிற தெரண ,ஹிரு என்ற ரெண்டு ஒஸ்தாத் மாமாக்கள் கத்னா என்னும் விருத்த சேதனம் செய்து இருப்பதால் அது இப்போதைக்கு முஸ்லிம்...நாளை ஏப்ரல் இருபத்தொன்று வேறு வருகிறது..ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் உம் கிறிஸ்தோபர் நோலனும் சேர்ந்து டைரக்ட் பண்ணியது போல ஒரு அட்டகாச திரைக்கதை எழுதப்பட்டு இருக்கலாம்....யார் கண்டார்..

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.