முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு ரூ.5000

தற்போது பயன்கனை பெறும் மற்றும் எதிர்பார்த்திருக்கும் முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்காக ரூ. 5,000 கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்டு, காத்திருப்பு பட்டியலிலும் உள்ளடக்கப்படாதவர்கள் இருப்பினும் கிராம குழுவின் மூலம் கடைபிடிக்கப்பட்டுள்ள முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்காக இந்த ரூ. 5,000 கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (15) பெண்கள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
தற்போது கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 574,387 முதியவர்கள் தவிர்ந்த இதற்கு மேலதிகமாக, 61,615 பேருக்கு ரூ.5,000 முதியோர் கொடுப்பனவை வழங்கப்படவுள்ளது.
கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 109,494 விசேட தேவையுடையவர்களுக்கு மேலதிகமாக 14,195 பேருக்கு ரூ.5,000 கொடுப்பனைவு செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தற்போது கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 38,747 சிறுநீரக நோயாளிகளுக்கு மேலதிகமாக, மேலும் 5,884 பேருக்கு ரூ.5,000 கொடுப்பனைவு செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொடுப்பனவுகள் இன்றையதினம் (15) கிராம சேவகர்களால், குறித்த பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துகள்