இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் (12) மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்பு பேருவளையில் இருந்து புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 4 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக களுத்துறை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரண சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 55 பேர் பூரண சுகமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக