இருபதாம் நூற்றாண்டுகளில் பாடசாலை சென்றவர்கள் நாம்.அப்போதைய காலத்தின் சுவையான அம்சங்களை இந்த நவீனம் விழுங்கி விட்டதென்பேன்.
ஆம், இரண்டு நாளைக்கு முன்பதாய்த்தான் இறப்பர் மரங்களின் செறிவையும், அடர்த்தியையும், அவை தரும் நிழல்களையும் , அவற்றின் கீழ் இருந்து நாங்கள் படித்த நாட்களையும் பற்றி என் மகளிடம் அலவளாவினேன். அந்த்ப்பிஞ்சுக்கு அதெல்லாம் ஒரு கதை. எங்களுக்கு....!!! கடந்துவிட்ட சுவாரஷ்யம்...!!! அது மட்டுமல்ல இன்னோரன்ன நிகழ்வுகளும் நெஞ்சினுள் இன்னும் நிழலாடுகின்றன. எம் காலத்து பொக்கிஷங்கள் அவை.
பாடசாலைக் காலமதில் சமூகக் கல்வி பாடத்தில், படித்த நினைவு... பண்டமாற்றுப் பொருளாதார முறை. இன்றைய நாட்களில் அவை இன்னும் வெகுவாக நினைவில் வருகின்றன.
  மீண்டும் அப்படி ஒரு நிலை இன்றைய சமூகத்தினுள் ஊடுருவி இருக்கின்றது எனலாம். பணமின்றிய மனிதன் கையாண்ட முறை அது. தற்போதைய நாட்டின் நிலைமை கூட விளைச்சல் இட்டு பண்டமாற்றுக்காய் தயாராகிறது.
Lockdown Srilanka
Fayasa Fasil

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.