ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருக்கும்  இலங்கைப் பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உதவிகளுக்காக, இலங்கை அரசாங்கம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பிழையான தகவல்களை உள்ளடக்கிய சில வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமை குறித்து அங்குள்ள இலங்கைத் தூதரகம் அண்மையில் கவனம் செலுத்தியிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகள், வைத்தியசாலைகளுக்கும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு மிக உயர்ந்த முறையில் கண்காணிக்கப்பட்டதாக தெரிவித்து ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது.

அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கைத் தூதரக ஜெனரல் அலுவலகம் ஆகியன இணைந்தும், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், நலன்புரி சங்கங்கள் மற்றும் ஏனைய சமூக மற்றும் மத அமைப்புகளும் அங்குள்ள இலங்கையர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தன.

எனவே, ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கை தூதரக ஜெனரல் அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு வினவமுடியும் என்றும் இலங்கைத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.