அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கான விசேட ஜனாதிபதி செயலணி நாடு முழுவதும் மரக்கறி மற்றும் பழவகைகளை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளது.
தற்பொழுது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் புறக்கோட்டை மெனிங் மொத்த வர்த்தக சந்தை கொவிட் 19 (COVID 19) தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக மேலும் ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதனால் ஜனாதிபதி செயலணி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பாக செயலணி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கான விசேட ஜனாதிபதி செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
மரக்கறி மற்றும் பழவகைகளை கொள்வனவு செய்தல்
தற்பொழுது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் புறக்கோட்டை மெனிங் மொத்த வர்த்தக சந்தை கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக மேலும் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளது.
இதன் காரணமாக!
தற்பொழுது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் புறக்கோட்டை மெனிங் மொத்த வர்த்தக சந்தை கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக மேலும் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளது.
இதன் காரணமாக!
1. தற்பொழுது மரக்கறி மற்றும் பழவகை உற்பத்தியை மெனிங் வர்த்தக சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தமது உற்பத்தியை மீகொட, நாரேஹென்பிட்டி, இரத்மலானை, வெலிசறை, பிலியந்தல மற்றும் வெயங்கொடை ஆகிய இடங்களில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறும்,
2. மெனிங் மொத்த வர்த்தக சந்தையில் மொத்த சில்லறை வர்த்தகத்திற்காக மரக்கறி மற்றும் பழவகைகளை கொள்முதல் செய்யும் வர்த்தகர்கள் இவற்றை கொள்வனவு செய்வதற்காக மேலே குறிப்பிடப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை நாடுமாறும் அறிவிக்கப்படுகின்றது.
3. மேலும், தற்போதைய சூழ்நிலையில் நிலைமையை கருத்தில் கொள்ளும் போது மொத்த வர்த்தக சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதன் காரணமாக மரக்கறி மற்றும் பழவகைகள் வீண்விரயமாகக்கூடும் என்பதினால் தாமதப்படுத்தக்கூடிய உற்பத்திகளின் அறுவடையை தாமதப்படுத்துவதன் மூலம் இந்த வீண்விரத்தை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று உற்பத்தியாளர்களுக்கு அறிவித்துக் கொள்கின்றோம்.
4. இதற்கு மேலதிகமாக அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி மற்றும் பழவகைகளை மாவட்ட செயலாளர் மற்றும் விவசாய சேவை மத்திய நிலையத்தின் ஊடாக கொள்வனவு செய்து பொது மக்களின் மரக்கறி மற்றும் பழவகைத் தேவைகளுக்காக விநியோகிப்பது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்படி ஊடக அறிக்கைக்கு பொருத்தமான வகையில் விளம்பரத்தை மேற்கொள்ளமாறு இத்தால் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஊடக அறிக்கைக்கு பொருத்தமான வகையில் விளம்பரத்தை மேற்கொள்ளமாறு இத்தால் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)