நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ள விபத்தில் பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (07) நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மோட்டார் சைக்கிளில் நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, அடை மழை காரணமாக அவரது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று வீட்டு மதிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 
இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்தவருமான 33 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது கடமையை முடித்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு திரும்பும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
(தினகரன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.