(பஸ்ஹான் நவாஸ்)
சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கதை
பேருவளை ஜாமியா நளீமிய்யாவின் விரிவுரையாளர் எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய செய்ஹ் இம்தியாஸ் (நளீமி) Imthiyaz Iium அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது
"பஸ்ஹான் டொக்டர் உங்களுக்கு பேசச் சொன்னார்' என்னை ஞாபகமில்லையோ தெரியாது ? என்று கேட்டதும் ' அவருக்கு உங்களை ஞாபகமாம்' உடனே பேசுங்கள் என்றார்.
கலாநிதி அவர்களை தொடர்புகொண்டு பேசிய போது தஸவ்வுப் பற்றி எழுதி அனுப்பியதை தான் வாசித்ததாகவும் பின்பு சில வாரங்களில் கல்கிஸ்ஸை வீட்டுக்கு வந்து சந்திக்குமாறும் அறிவித்தார்.
பாடசாலையில் உயர்தரம் படிக்கும் காலத்தில் எனது வீட்டில் இருந்த புத்தக ராக்கையில் 'ஆத்மஞானிகளும் அறப்போராட்டங்களும்' என்ற புத்தகத்தை முதலில் வாசித்தேன்.
தரீக்காக்கள், தஸவ்வுப் தொடர்பான எனது வாசிப்பில் முதலாவது மாற்றம் ஏற்பட்ட தருணம் அது. தரீக்காக்கள் செய்த பங்களிப்புக்கள் பற்றி, கலாநிதி சுக்ரியின் புத்தகத்தை வாசித்த நாள் தொடக்கம் அவர் மீது அன்பும், மரியாதையும் மனதில் ஏற்பட ஆரம்பமானது
சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பழைய சோனத்தெருவில் அமைந்துள்ள "மஃனமுஷ் ஷூஹதா" தக்கியாவில் இடம்பெற்ற தமாம் மஜ்லிஸில் அவர் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.
எடின்பரோ பல்கலைக்கழகத்தில் தாம் கலாநிதி கற்கையை மேற்கொள்ளும் காலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு "ஜலாலிய்யா ரதீப்" பற்றி உரையாற்றியதாகவும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் அரபுப் புலமையைக் கண்டு வியந்த அரபு அறிஞர்கள் அவரை இறுதி வரை ஓர் அரபி என்றே நம்பியதாகவும் கூறினார்.
அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம், அல்லாமா சதகதுல்லாஹ் காஹிரி போன்ற தமிழ் பேசும் ஞானிகளின் பங்களிப்புக்களை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை அவர்களை சாரும்.
பேராசிரியர் லோனா தேவராஜா அவர்களுக்கும் இந்த இரண்டு மகான்களையும் அறிமுகம் செய்த பெருமை அவர்களைச் சாரும்.
கலாநிதி சுக்ரி அவர்கள் தமிழ் பேசும் உலகைச் சேர்ந்வர்களுக்கு தஸவ்வுப்பை இலகுவாகக் கற்றறிருந்து கொள்ள உதவினார்.
நாம் பணிபுரிகின்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்
1 மௌலானா ரூமியின் சிந்தனைகள்
2 இமாம் கஸ்ஸாலியின் தத்துவ வித்துக்கள்
ஆகிய நிகழ்ச்சிகளையும் இரண்டு இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக நடத்திவந்தார்.
அனைவரும் அவர்களைப் பற்றி எழுதிவிட்டார்கள்; கலாநிதி சுக்ரியின் எழுத்துக்கள் எமது முன்னோர்கள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். தரீக்காக்கள், தஸப்வுப் பற்றி அறியாதவர்கள் "ஆத்மஞானிகளும் அறப்போராட்டங்களும்" என்ற புத்கத்தை வாசிப்பது சிறப்பு. அல்லாஹ்தஆலா அன்னாரின் சேவைகளை ஏற்று அருள்புரிவானாக.
(கடைசியாக அவர்களை சந்தித்த போது எடுத்துக்கொண்ட படம்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.