இறைவனை பிரார்த்திப்பவர்கள் மற்றும் தியானத்தில் ஈடுபடுபவர்கள் கவலை, பயம், பதற்றம், ஆவேசம், பிழையான எண்ணம், நிர்பந்தமான நடத்தைகள், சமூக அச்சம் போன்ற மனப்பதகளிப்பு தொடர்பான கேளாறுகளை மிகக்குறைவாகவே உணர்கினறார்கள் என்று பேய்லர் எனும் பல்கலைக்கழக ஆய்வாளரகள் கண்டுபிடத்துள்ளனர். 1714 தன்னார்வலர்களை ஆய்வுக்கு உள்ளாக்கி இந்த தகவளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில் வழக்கமான பிரார்த்தனை, தியானம் மற்றும் ஆன்மீக பயிற்சிகள் மூளையின் புறணியின் பகுதிகளை அடர்த்தியாக்குவதாகவும் குறிப்பாக மனச்சோர்விலிருந்து பாதுகாக்க துணையாக இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

பிரார்த்தனையில், தியானத்தில், திக்ருகளில் நாம் நிலைபெரும்போது எமது உள்ளம் ஆரோக்கியம் அடைவதுபோன்று உடலும் அழகும் ஆரோக்கியமும் அடைகின்றது.
மனக்கவலைகளில் இருந்தும் பிழையான, வேண்டாத எண்ணங்களலிருந்தும் விடுபட நாம் பிரார்த்தனையிலும் அழகான தியானங்களிலும் ஈடுபடுவோம்.
……………………
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.