அந்தோ அந்த செருப்புகளை தேடி தாருங்கள்....
பக்கவாத கணவனின் பசி கொட்டாவியை கண்டு - பலரில்லம் சென்று தேய்ந்து ஒய்ந்து போன - அந்த செருப்புகளை தேடி தாருங்கள்.

அரசாங்கம் தந்த ஐந்தாயிரத்தில் - 50 பேரின் கடன் அடைத்த அந்த ரோஷகார செருப்புகளை தேடி தாருங்கள்.

மகளின் பசி போக்க ஒரு பால்மா பெக்கட் வாங்க ரெண்டுநாளாய் கைபிசைந்த அந்த தாயின் ஓட்டை செருப்புகளை தேடி தாருங்கள்

புத்தாண்டு வருவாயை நம்பி புதுசாக வாங்கி வைத்த மண்சட்டி வீட்டுக்குல் சிறு குன்றாய் வீர்றிருக்க ஊரே அடங்கியதால் சோற்றுக்கு வலியின்றி பள்ளி கஞ்சி சுவயின்றி பசித்திருந்த ஜீவனுக்கு
அவசரத்துக்கு போட வைத்திருந்த அந்த
ஓட்டை செருப்புகளை தேடி தாருங்கள்

யாரோ கொடுக்கும் பத்து ரூபாயும்
இருட்டில் இருப்பவனுக்கு கிடைத்த சிறு ஒளி விளக்கு தான்..
வெளிச்சத்தில் வாழ்போருக்கு விளக்கின் ஒளி தெரியவா போகிறது.

J.F.Mahira siraj
22.05.2020

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.