அருகில் இருக்கிறான் இறைவன்

-------------------------

மக்கள் எழும்பவே முடியாமல்
விழுந்துவிட்டதாக
நினைத்துக் கொண்டிருக்கிறேன் நான் -
இல்லை! நிமிர்ந்து நிற்பதற்காக
கொஞ்சம் வழுக்கிவிட்டோம்
அவ்வளவுதான்...! என்கிறாய் நீ

உலகம் எமக்கு
எதிரியாகிவிட்டதே என்று
கோபப்பட்டுக் கிடக்கிறேன் நான் -
எதிரி இருந்தால் மட்டுமே
உண்மையான வலிமை பிறக்கிறது
என்கிறாய் நீ

செல்வத்தில் இருந்தவர்கள்
சில்லறையாகிவிட்டார்களே
என்று யோசிக்கிறேன் நான் -
சில்லறையில் இருந்துதான்
நல்ல செல்வந்தன் பிறக்கிறான்
என்கிறாய் நீ

மரத்தில் ஏறமுடியாமல்
நடுங்கி நிற்கிறேன் நான் - 
வானத்தை அடைய முடியாது என்று
எவரும் சொல்ல அனுமதிக்கமாட்டேன்
என்கிறாய் நீ

இந்த துக்க காலம்
எப்போது மீழும் என்று
தலையில் கைவைக்கிறேன் நான் -
வாழ்க்கையின் அர்தத்தை
சொல்லித் தரும் தூதுவனாகவே
துக்ககாலம் வந்திருக்கிறது என்கிறாய் நீ

இந்த நெருக்கடி நிலையில்
இறைவன் எங்கு போனான்..! என்று
தேடுகிறேன் நான் -
சோதனையின் போது
ஆசிரியர் அமைதியாக இருந்துவிடுவார்
என்கிறாய் நீ

ஆம்!
அவர் அமைதியாக இருந்தாலும்
என்னோடுதான் இருக்கிறார்!
என்பதை புரிந்துவிட்டேன் நான்

……………………
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.