தைக்காக்கள் அல்லது தக்கியாக்கள்
(தைக்காக்கள்/தக்கியாக்களின் வரலாறு) 


இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம் கிராமங்களில் தக்கியாக்கள் அமைந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். பள்ளிவாசல்களைப் போன்று சிறு அளவில் இவை அமைக்கப்பட்டிருக்கும்.

புகாரித் தக்கியா, முஹியத்தீன தக்கியா, சின்னத் தக்கிய்யா போன்ற பெயர்களில் எமது ஊர்களில் இவை காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையங்கள் அல்லது ஆன்மீகத்தளங்கள் துருக்கி மற்றும் பால்கன் நாடுகளில் "தெக்கே" tekke என்று அழைக்கப்பட்டன.  தெக்ககே நிறுவனங்கள் ஆன்மீக, கலாசார, போராட்ட பயிற்றுவிப்பு நிலையங்களாகக் காணப்பட்டதாக ஹாவட் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் ஆன்மேரி சீமெல் தனது Mystical dimensions of Islam என்ற புத்தகத்தில் கூறுகிறார்கள்.
தெக்ககே" tekkeஎன்ற சொல்லுக்கு ஒன்றுகூடும் இடம் இடம் அல்லது ஆன்மீக மாணவர்கள் தங்குமிடம் என்பது அர்த்தமாகும்.

காலப்போக்கில் இவற்றை நிறுவனப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் அவை ஒரு செய்ஹ் அல்லது தனிபர்களின் சொந்த இடமாக அல்லது வீடாக  இன்றி அனைவரும் பயன்படுத்தக்கூடிய மத்திய நிலையங்களாக மாறியிருந்தன.

இவ்வாறான நிலையங்கள் கிழக்கில் "கான்காஹ்" என்று அழைக்கப்பட்டன. மத்திய கால எகிப்திலும் கான்காஹ் நிலையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.

தெக்ககே" tekke என்ற சொல்லின் பரிணாமமே  "தைக்காக்கள்" அல்லது "தக்கியாக்கள்" என்பதாகும்.  தமிழ் நாட்டில் "தைக்காக்கள்" என்றும் இலங்கையில் "தக்கியாக்கள்" என்றும் இது அழைக்கப்டுகின்றது.

" தெக்ககே" / "tekke" அல்லது தைக்காக்களில் திக்ர் நிகழ்ச்சிகள் நாளாந்தம் இடம்பெற்றன. காலானித்துவாதிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு   போராடங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றிய திட்டங்கள் இங்கு வரையப்பட்டன.

பிரதன பள்ளிவாசல்களுக்கு அருகில் தெக்ககே" tekke அல்லது தக்கியாக்கள் நிறுவப்பட்டன.  அங்கு பயிற்றப்பட்ட மாணவர்கள் அல்லது முரீத்தகள் சகல துறைகளிலும் திறமையுடையவர்களாக இருந்தார்கள். இதனால் தான் துருக்கி பால்கன் உட்பட ஐரோப்பிவிலும் இலங்கை தமிழ்நாடு போன்ற இடங்களில் உள்ள
"தெக்ககே" tekke அல்லது "தைக்கா" அல்லது "தக்கியாக்களில்" சிறந்த கட்டநிர்மாணக்கலையின் சிறப்பியல்புகளை அவதானிக்க முடியும்.  தைக்காக்களில் பயிற்றப்பட்டோரிடம் கூடுதல் கலை இயல்புகள் காணப்பட்டன.

அடிக்கடி அல்குர்ஆனை ஒதுதல், கஸீதாக்களைப் பாடுதல், ஹழராக்களை நடத்துதல் போன்ற செயற்பாடுகளினால் அழகிய குரல் வளமும், தனித்துவ மொழிநடையும், கவித்துவமும் அவர்களுக்கு மத்தியில் சாதாரணமாகக் காணப்பட்டன.

தெக்கே" tekke அல்லது தைக்காக்களில் சமயலறைகள் (kitchens) காணப்படுகின்றன. இவை "குசினி" என்று அழைக்கப்படுவது வழமை. தெக்கேக்களில் ஆன்மீக மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்குப் பின் அதில் பங்கறே்றவர்களுக்கு உணவு வழங்கவும், அங்கு  தங்கியிருப்பவர்களுக்கும், தெக்கேக்களுக்கு வரும் அதிதிகளுக்கு உணவு சமைப்பதற்காகவும் தைக்காக்களில் சமலறைகள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறான தெக்கே அல்லது தைக்காக்கள் எகிப்தில் "கான்காஹ்" என்று அழைக்கப்பட்டன.
சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி (றஹ்) அவர்கள் "கான்காஹ் ஸஈத் அஷ் ஷுஹதா"  என்ற  கான்காஹ்வை (தைக்காவை) கி.பி 1173ல் நிறுவினார்.

சுல்தான் சலாஹுத்தீன்  (றஹ்) அங்கிருந்தவர்களுக்கு மானிய அடிப்படையில் ரொட்டி, இறைச்சி என்பனவற்றை வழங்கி வந்தார். ஈதுல் பித்ர் ஈதுல் அழ்ஹா போன்ற பெருநாட்களில் அங்கிருந்த 300 பேருக்கு புத்தாடைகளை வழங்கிவந்தார். தேவையான போது நிதி ரீதியான உதவிகளையும் வழங்கினார்.
சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி (றஹ்) அவர்கள் "கான்காஹ் ஸஈத் அஷ் ஷுஹதாவுக்கு  அடிக்கடி சென்று வந்தார்.

தெக்கே" tekke அல்லது தைக்காக்கள் கூடுதலாக காதிரிய்யா ஆன்மீக உள்ளீர்க்கப்பட்டுள்ளது.  ஸாவியாக்கள் மற்றும  ரிபாத்கள் ஷாதுலிய்யா அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்ட மத்திய நிலையங்களாகும்.

படம் : துருக்கியில் பொஸ்னியா ஆகியே இடங்களில் உள்ள  தெக்கேக்கள்; திக்ர்  மஜ்லிசும், கொழும்பு புகாரித் தைக்காவும்.

தொகுப்பு
பஸ்ஹான் நவாஸ்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.