பல ஆயிரம் தடைகள்
பல வகையில்,
பல உருவில்,
தோன்றினாலும்
உன்னுள் இருக்கும் நம்பிக்கை ஓர் சாதனை படைத்திடும் மனிதா !
நம்பிக்கை வை
சோதனைகள் ஓர் தடையல்ல
உன் முயற்சியின் சிகரம்!
உன் வாழ்கையின் வெற்றி!
உள்ளம் தளராதே!
உண்மை மற்றும் ஊக்கத்துடன் செயல்படு !
அதுவே உன்னை புனிதனாக மாற்றிடும்
மனிதா !
உன்னத மனிதாக புகழ் பாடும் !
உன் வாழ்வின் அவமானங்கள் அனைத்தும் உன் வெற்றிக்கான தடைகள் அல்ல
அது தான் மாணிக்க படிக்கற்கள் !
நூறு தோல்விகளை நீ சந்தித்தாலும்
நூறு தடவைகள் நீ
அவமானம் அடைந்தாலும்
உள்ளம் தளராதே !
மனிதா !
தடைகளை தகர்த்தெறி
பல நூறு தடைகளுக்கு பின்
ஓராயிரம் வெற்றிகளை நீ காண்பாய் !
பல ஆயிரம் இன்பங்கள் உன்னை தேடி வரும் !
வெற்றி நிச்சியம்
வென்றிடுவாய் சாதனையாய் !
இவ்வுலகில்
வரும் சமுதாயம்
உன்னை போற்றி புகழ்ந்து பேசும்
உன் வாழ்வே
 ஓர் சாதனையாகும்

சத்திய தீன் மார்க்கம்
நிலைக்க காரணம்
சன்மார்க்க போதகர் கண்மணிகளாரின்
பொறுமையே  !
பல இன்னல்கள் தாண்டி
பல துன்பங்கள் தாங்கி
பல வருடம்
பல வித கஷ்டங்கள்
பலரும் நபிகளாரை விரட்டினாலும்
உலக முடிவு வரை
சத்திய மார்க்கம்
சர்தார் முஹம்மது நபிகளாரை போற்றி புகழ்கிறது
நபிகளாரை நேசிக்க சொல்கிறது
இத்தனைக்கும் காரணம்
நபிகளாரின் வாழ்வில் வந்த எதுவும் தடையல்ல
முயற்சிக்கான படிக்கற்களே  !
தீன் மார்க்கம் ஒளி வீச ஏற்பட்ட மா பெரும் வெற்றி படிகளே  !

வலிகள் இன்றி ஓர் பெண் தாயாக ஆகிட முடியாது
பல முறை சிறு குழந்தை விழுந்தெழாவிட்டால் வலி என்றால் என்னவென்றே உணராமல் இருந்திருக்கும்

நீ விழுகிற ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு நொடியும்
உன் மனம் நொந்து போகலாம்
ஆனாலும் உன் நம்பிகை உடைய கூடாது தன்னம்பிக்கை உன்னுல் வளரனும்
வெற்றிகளுக்கு முன் தோல்வி
 தடையல்ல மனிதா !
ஓரு தடையே அல்ல  !

தோல்வி என்ற ஒன்று இருந்தால் தான் வெற்றி என்ற மணி மகுடம் உன்னை தேடி வரும்
தோல்வியை சந்திக்காத எவரும் சாதனை படைத்ததாக வரலாறு இல்லை
உன் வாழ்வின் தோல்விகள், இழிவுகள்,
உன் முன்னேற்றத்தின் தடைகள் அல்ல
அதுவே உன்னை செதுக்கி மா பெரும் வரலாறு படைத்திடும்
மனம் தளராதே  !
மனம் வருந்தாதே !
தடைகளை தகர்த்தெறி  !
வெற்றி நிச்சியம்  !
மனிதா  !
வெற்றி நிச்சியம்  !
இன்ஷா அல்லாஹ்..!!

சர்மிலா பிந்த் நூமான்
ஆலிமா முஅஸ்கரிய்யா

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.