கஹட்டோவிட்டவிலே நீண்டகாலம் தொழிற்பட்டு வரும் “ரோயல் சிட்டி” (Royal City - RC) அமைப்பானது இம்முறையும் மக்கள் நலனுக்காக செயற்படுவதைக் காண முடிகிறது.”ரோயல் சிட்டி” (RC) அமைப்பு இளைஞர்கள் பெருவாரியாகக் கொண்டியங்கும் அமைப்பு.

COVID-19 நச்சுயிரால் ஸ்தம்பிதமடைந்துள்ள இந்நிலையில் உறுப்பினர்களிடமிருந்து 187,550 ரூபாய் வசூலிப்பு மற்றும் நன்கொடையிலிருந்து கஹட்டோவிட்ட கிராமத்தின் ரோயல் சிட்டி வட்டத்துக்குள் அடங்கும் 110 குடும்பங்களுக்கும் இன்று (17) உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதற்கு உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சிப் பெருக்கோடு நன்றி நவின்றதோடு வரும் வருடங்களில் இன்னுமின்னும் சிறப்பாக செயற்பட நல்லுள்ளங்களின் ஆசியும் இறைவனின் அருளையும் மேற்படி அமைப்பினர் வேண்டிநிற்கின்றனர்.

(கஹட்டோவிட்ட சிபான்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.