ரமழான் வசந்தமே!

வருடத்தின் வசந்தமே!
வல்லவன் ரஹ்மான் உவந்தளித்த புனித மாதமே!

வருடம் ஒரு முறை வந்திடுவாய்!
வசந்தம் பரப்பிச் சென்றிடுவாய்!

உள்ளக் கறைகள் அகற்றிடுவாய்!
கல்பில் ஒளியை ஏற்றிடுவாய்!

பாவங்கள் உணரச் செய்திடுவாய்!
பாதகங்கள் நீக்கி - எம்மை
பரிசுத்த மாந்தர் ஆக்கிடுவாய்!

மாந்தர் வாழ்வு ஏற்றம் பெறவே
மாண்பாய் வந்தாய் ரமழானே!

ஏழை எளியோன் பசியை உணர
ஏந்தல் நபியவர் வழியை ஏற்றுநடக்க
சிறப்பாய் வந்தாய் ரமழானே!

தான தர்மங்கள் தாராளமாகக் கொடுத்திடவே
தயாள மனதை தந்திடுவாய் ரமழானே!

துன்பம் வந்து மிகைத்தாலும்
பொறுமை நிறைவாய் தருவாயே!

நல்லவர்கள் உருவாகும்
பொல்லாதோரும் உருகிடும்
வல்லவனின் அருளினால் வையகமே சிறந்திட
அருள் பொழியும் ரமழானே!

புண்ணியங்கள் அள்ளித்தரும்
கண்ணியம் நிறைந்த ரமழானே!

இறையச்சம் இனிதாய் மலர்ந்திடவே
இறைஞ்சுகிறோம் இறையிடத்திலே!

ஒன்றுக்குப் பத்தாக
நன்மைகள் அள்ளித் தந்திடும் மாதம்தனில்
நிறைவாய் செய்யும் அமலுக்கு
அருளாய் சுவனம் தருவான் - ரஹ்மானே!

~ Sasna Baanu Nawas ~
            Thihariya

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.