ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 6 மணிமுதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்ததுடன் கடந்த மே மாதம் 11ஆம் திகதிமுதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு குறிப்பிட்ட காலப் பகுதிக்கு மாத்திரம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. 
இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 70 ஆயிரத்து 272 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து 19 ஆயிரத்து 952 வாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.